என் மலர்
நீங்கள் தேடியது "Cinema Theatres"
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், படம் பார்க்க வருவோர் வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை திரையரங்குகளுக்குள் கொண்டு செல்வதை திரையரங்க உரிமையாளர் தடை செய்யலாம். இருப்பினும், அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களுக்கு சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
மேலும், கைக்குழந்தை அல்லது குழந்தையை அழைத்து வருவோர் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவை திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- கலெக்டர் வல்லவன் அனுமதி
- சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் நகர், புறநகர், கிராமப்புறங்களில் என 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. தியேட்டர்களின் பராமரிப்பு உட்பட பல்வேறு காரணங்க ளால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என புதுவை அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வல்லவன் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற ஏ.சி. தியேட்டர்களுக்கு பாக்ஸ் ரூ.180, எலைட், பால்கனி, டீலக்ஸ், ரூ.170, முதல் வகுப்பு ரூ.130, 2-ம் வகுப்பு ரூ.100, 3-ம் வகுப்பு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.






