என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chouhan"

    பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகள் பூமிக்கு பாரமானவர்கள் என்றும், வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்றும் மத்திய பிரதேச முதல்மந்திரி தெரிவித்தார். #ShivrajSinghChouhan
    போபால்:

    மத்திய பிரதேச மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்ட்சவர் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பாலியல் வன்கொடுமை வழக்குகளை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஒரே விதமான தீர்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வன்கொடுமை குற்றவாளிகளுக்கான தண்டனைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் சவுகான் கூறினார்.



    தொடர்ந்து பேசிய அவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்கள் வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்றும், பூமிக்கு பாரமாக அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், மாண்ட்சவர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தாம் இருப்பதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் எனவும்  மத்திய பிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறினார். #ShivrajSinghChouhan
    ×