search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child lifting rumours"

    குழந்தை கடத்தல் வதந்திகள் பரவியதால் அசாமில் 3 சாதுக்களை அடிக்க நூற்றுக்கணக்கானோர் கூடிய நிலையில், ராணுவம் வந்து மூன்று பேரையும் மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
     கவுகாத்தி:

    நாடு முழுவதும் சமீபத்தில் குழந்தை கடத்தல் வதந்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில போலியான வீடியோக்களின் உதவியுடன் பரவும் இந்த வதந்தியை பலர் உண்மை என நம்பி சந்தேகத்துக்கு இடமான வகையில் காண்பர்வர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

    கடந்த சில வாரங்களில் இது போன்ற தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பல தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள மஹுர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 3 சாதுக்கள் காவி உடையுடன் வந்துள்ளனர்.

    அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என யாரோ கிளப்பிவிட, அதை உண்மை என நம்பி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சாதுக்களை தாக்க ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் கூட்டத்தை சமாளித்து மூன்று சாதுக்களையும் மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். 

    இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. 
    வதந்தியால் நடைபெறும் தாக்குதல் மற்றும் படுகொலை சம்பவங்களை தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. #ChildLiftingRumours #MobLynching
    புதுடெல்லி:

    குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளால் பலர் சந்தேகத்தின் பேரில் பொது மக்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.  தமிழ்நாடு, அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இது போன்ற சம்பவங்களால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதைத் தொடந்து  மாநில போலீசார்  இது போன்ற  வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில், வதந்தியால் நடைபெறும் தாக்குதல் மற்றும் படுகொலை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும், குழந்தைக் கடத்தல் குறித்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உள்துறை அறிவுறுத்தி உள்ளது.  #ChildLiftingRumours #MobLynching
    ×