search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mob Lynching Incidents"

    வதந்தியால் நடைபெறும் தாக்குதல் மற்றும் படுகொலை சம்பவங்களை தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. #ChildLiftingRumours #MobLynching
    புதுடெல்லி:

    குழந்தைக் கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளால் பலர் சந்தேகத்தின் பேரில் பொது மக்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.  தமிழ்நாடு, அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இது போன்ற சம்பவங்களால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதைத் தொடந்து  மாநில போலீசார்  இது போன்ற  வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில், வதந்தியால் நடைபெறும் தாக்குதல் மற்றும் படுகொலை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும், குழந்தைக் கடத்தல் குறித்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உள்துறை அறிவுறுத்தி உள்ளது.  #ChildLiftingRumours #MobLynching
    ×