என் மலர்
நீங்கள் தேடியது "chennai lawyer suicide"
மாமல்லபுரம் விடுதியில் சென்னை வக்கீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது50). வக்கீலான இவர் தனது இரண்டாவது மனைவியுடன் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி அவர் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள தனியார் விடுதியில் தனியாக வந்து தங்கியிருந்தார். அவரது அறை நேற்று மாலை வரை திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அறைக்கதவை திறந்து பார்த்த போது அங்குள்ள கட்டிலில் ரவீந்திரன் இறந்து கிடந்தார். அருகில் விஷப்பாட்டிலும் கிடந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
ரவீந்திரன் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்தார் என்பது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






