என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai collector office"

    • சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 6.7.2022 (புதன்கிழமை) அன்று பகல் 11.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 6.7.2022 (புதன்கிழமை) அன்று பகல் 11.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.

    இந்த தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் இன்று திறந்து வைத்தார். #MLA #MP #HighCourt #SpecialCourt
    சென்னை:

    எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார். இந்த விழாவில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MLA #MP #HighCourt #SpecialCourt
    ×