என் மலர்

  நீங்கள் தேடியது "chekkanoorani"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கானூரணியில் ஆட்டோ டிரைவரை தாக்கி வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். #arrest

  மதுரை:

  உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48), ஆட்டோ டிரைவர்.

  இவர் செக்கானூரணியில் திருமங்கலம் சாலையில் ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு 4 பேர் வந்தனர்.

  அவர்கள், பணம் கேட்டு கணேசனிடம் மிரட்டல் விடுத்தனர். அவர் தர மறுத்ததால் அடித்து உதைத்து விட்டு, கணேசனின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.

  இது குறித்து செக்கானூரணி போலீசில் கணேசன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  இதில் கணேசனிடம் பணம் பறித்ததாக கொக்குளம் கழுங்கு பட்டியைச் சேர்ந்த பழனி குமார் (23), காசிமாயன் (25), தமிழரசன் (23), திலீப் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  ×