search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "changed"

    • கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
    • கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவை,

    கோவையில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, கண்ணூர் செல்லும் ரெயில்களின் நேரம் வருகிற 18-ந் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் இருந்து தினமும் மாலை 6.25 மணிக்கு கோவை வந்தடைந்து இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும் திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவைக்கு மாலை 6.10 மணிக்கு வந்தடையும். இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

    இதேபோல, தினமும் இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு-கோவை ரெயில் (எண் 06807) ஆகஸ்டு 18 முதல் பாலக்காட்டில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும்.

    கோவையில் இருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவையில் இருந்து தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு கண்ணூர் சென்றடையும் கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
    • சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் ரெயில்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    கோவை,

    கோவை மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 7 ெரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-பாலக்காடு ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. எனவே சொர்ணூரில் இருந்து 11-ந் தேதி காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ெரயில் (எண் 06458), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ெரயில் (எண் 16324) ஆகியவை பாலக்காடு-கோவை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

    கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ெரயில் (எண்.06459) கோவை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இது தவிர, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு வரும் ெரயில் (எண் 16843), போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    சொர்ணூரில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 06804), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11.05 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ெரயில் (எண் 22609) ஆகியவை பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

    கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு நகரம் புறப்பட்டுச் செல்லும் ெரயில் (எண் 06807) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினையில் விஸ்வரூபம்.
    • நெல்லையின் அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

    நெல்லை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைைம பிரச்சினையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்மாவட்டங்களிலும் ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்டை எடுத்து வருகினறனர்.

    தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி தனித்தனியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நெல்லை மாவட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்ைட எடுத்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 52 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இதில் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால் தற்போது 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள இன்று புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் தற்போது முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 90 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உள்ளதாக கூறப்படுகிறது.

    கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா தலைமை செயலாளர், தலைமை வக்கீல், 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றியது அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா, முதல்வர் அலுவலகத்துக்கு சென்று அமர்ந்ததும் கோப்புகளை பார்க்கத் தொடங்கினார்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் பல்வேறு துறை உயர் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

    கர்நாடகா மாநில அரசின் தலைமை வக்கீலாக மதுசூதன் நாயக் இருந்தார். அவருக்கு பதில் நவதகி புதிய அரசு வக்கீலாக நியமிக்கப்படுவதாக எடியூரப்பா உத்தரவிட்டார்.

    அதன் பிறகு அரசின் கூடுதல் தலைமை செயலாளரையும் எடியூரப்பா மாற்றினார். அதன்படி புதிய கூடுதல் தலைமை செயலாளராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவை தவிர சில முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் எடியூரப்பா மாற்றினார். போலீஸ் உயர் அதிகாரிகளில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த இடமாற்ற அறிவிப்புகள் கர்நாடகா மாநில அரசுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பாவின் உத்தரவுகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    1. எம்.ஸ்ரீஅபினவ்-தக்கலை உதவி சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2. என்.எஸ்.நிஷா-சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    3. இ.சாய்சரண் தேஜஸ்வி- குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்கிறார்.

    4. ரவளி பிரியா கந்தபுனேரி- திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

    5. எஸ்.செல்வநாகரத்தினம்- தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    6. கே.பிரபாகர்- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

    7. எஸ்.எஸ்.மகேஸ்வரன்- திண்டுக்கல் அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராஜபாளையம் சிறப்புக் காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    8. வி.ஷியாமளாதேவி- பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை கூடுதல் கமிஷனராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    9. சி.ஷியாமளாதேவி- சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனரான இவர், மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    10. பர்வேஸ்குமார்- சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    11. எஸ்.சாந்தி- மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    12. பி.சாமுண்டீஸ்வரி- தமிழ்நாடு போலீஸ் அகாடமி சூப்பிரண்டான இவர், சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    13. ஜி.ஷாசங்க் சாய்- சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனரான இவர், அடையாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    14. ரோகித் நாதன் ராஜகோபால்- சென்னை அடையாறு துணை கமிஷனரான இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    15. ஜார்ஜி ஜார்ஜ்- சென்னை ரெயில்வே சூப்பிரண்டான இவர், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    16. பி.ராஜன்- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    17. ஜி.ஸ்டாலின்- சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    18. ஜி.சம்பத்குமார்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    19. பி.கண்ணம்மாள்- சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    20. எச்.ஜெயலட்சுமி- லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    21. சரோஜ்குமார் தாக்கூர்- லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக சூப்பிரண்டான இவர், திருச்சி ரெயில்வே சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    22. ஆன்னிவிஜயா- திருச்சி ரெயில்வே சூப்பிரண்டான இவர், சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

    23. என்.தேவராணி- சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பதவி ஏற்பார்.

    24. இ.எஸ்.உமா- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    25. ஏ.கயல்விழி- திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

    26. எஸ்.சக்திகணேசன்- திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக உள்ள இவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    27. டாக்டர் ஆர்.சிவகுமார்- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    28. ஐ.ஈஸ்வரன்- சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக உள்ள இவர், அம்பத்தூர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

    29. எஸ்.சர்வேஷ் ராஜ்- சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    30. ஆர்.அந்தோணி ஜான்சன் ஜெயபால்- சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக பணிபுரியும் இவர், சென்னை 2-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
    ‘கிரான்ட் டிரங்க்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சென்டிரல்- டெல்லி ஷாராய் ரோஹில்லா- சென்னை சென்டிரல் (வ.எண்.12615, 12616) செல்லும் ‘கிரான்ட் டிரங்க்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல்-டெல்லி சாராய் ரோஹில்லா இடையே ரெயில் சேவை வழங்கி வந்தது. இந்த நிலையில் ‘கிரான்ட் டிரங்க்’ எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்டிரல்-புதுடெல்லி வரை தான் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும். வருகிற 21-ந் தேதியில் இருந்து சென்னை சென்டிரல்-புதுடெல்லி கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும்(12615), வருகிற 23-ந் தேதியில் இருந்து புதுடெல்லி- சென்னை சென்டிரல் கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும்(12616) இந்த சேவை மாற்றம் அமலுக்கு வருகிறது.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×