என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandira Priyanga"

    • அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனின் முயற்சியால் காரைக்கால்-கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பஸ் சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த பஸ் சேவை கருக்குங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. புதிய பஸ் சேவையை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.

    புதுவை அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்களை இயக்க முடியாத சூழலில் தமிழக அரசு பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம்.
    • ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி மாநில அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக குடியரசு தலைவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.

    அந்த அறிக்கையில், "புதுச்சேரி முதல்வரின் அறிவுரையை தொடர்ந்து புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதே அறிக்கையை குடியரசு தலைவரின் செயலாளர் ராஜீவ் வர்மா வெளியிட்டு உள்ளார். முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் அக்டோபர் 8-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சந்திர பிரியங்கா அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    ×