என் மலர்
நீங்கள் தேடியது "cauvery nathineer meepu vetri koottam"
அதிமுகவில் தங்க தமிழ்செல்வனை சேர்த்துக்கொள்ள நாங்கள் தயார், ஆனால் அமைச்சர் பதவி தர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #MLAsDisqualified
திருச்சி:
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை, காவிரி ஒழுங்காற்றும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் மற்றும் தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும் உள்பட தமிழகத்திற்கான பல்வேறு அக்கூட்டத்தில் முன்வைத்தார்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் நடைபெறும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மயிலாடுதுறை செல்கிறார். கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் பாரட்டுக்குரியது. தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பது எப்படி சாத்தியமாகும் ? எனவே, தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பதவி தர முடியாது.
மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தினால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை’
இவ்வாறு அவர் தெரிவித்தார். #edappadipalanisamy #MLAsDisqualified

மயிலாடுதுறையில் இன்று காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
மயிலாடுதுறை:
சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பு பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் இன்று (திங்கட்கிழமை) மாலை காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்குகிறார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவையொட்டி முதல்-அமைச்சர் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வருகிறார். அதன்பிறகு அங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக கார் மூலம் மயிலாடுதுறை வருகை தருகிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் வாக்கி டாக்கியுடன் செயல்படுகின்றனர்.
நகர எல்லைப்பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் வழியில் உள்ள பாலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் குறிப்பாக கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் சாலையில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீருடை அணியாத போலீசாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #CauveryIssue #TNCM #EdappadiPalanisamy

பின்னர் மாலை 6 மணியளவில் முதல்-அமைச்சர் பேசுகிறார். பலத்த போலீஸ் பாதுகாப்புமுதல்- அமைச்சர் வருகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு தலைமையில், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 29 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று மயிலாடுதுறை நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.