என் மலர்
முகப்பு » Cattle Kidnap
நீங்கள் தேடியது "Cattle Kidnap"
- சோனாபூரில் தேசிய நெடுஞ்சாலை 37-ல் சென்ற லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.
- உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூர் பகுதியில் எண்ணெய் டேங்கரில் இருந்து ஏராளமான கால்நடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
குவஹாத்தி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சோனாபூரில் தேசிய நெடுஞ்சாலை 37-ல் சென்ற லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அப்போது 25 பசுக்கள் மற்றும் 11 இறந்த கால்நடைகளை லாரியில் இருந்து போலீசார் மீட்டனர். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
×
X