என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case against rowdy"

    • விஷ்ணு (வயது 18). இவர் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
    • தமிழ் என்கிற தமிழரசன் என்பவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன் தாக்கியதில் விஷ்ணுக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது.

    சேலம்:

    சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் காசீம். இவரது மகன் விஷ்ணு (வயது 18). இவர் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் என்கிற தமிழரசன் என்பவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன் தாக்கியதில் விஷ்ணுக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினர். அதில் தமிழரசன் ரவுடி என்பதும், ஒரு கொலை வழக்கில் ஜெயிலில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான தமிழரசனை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×