என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cargo truck hit it"

    • லாரி பின்னால் சென்று திரும்பும் போது மின் கம்பத்தில் திடீரென மோதியது.
    • இதில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது வாய்க்கால் புதூர். இவ்வழியாக சரக்கு லாரி ஒன்று வந்தது. அதில் பஞ்சு பேல்கள் ஏற்றப்பட்டு இருந்தது.

    பஞ்சு பேல்களுடன் எடை பார்த்த பிறகு லாரி பின்னால் சென்று திரும்பும் போது அருகில் இருந்த மின் கம்பத்தில் திடீரென மோதியது. இதில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    இதனையடுத்து உடன டியாக மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. பின்னர் உடைந்த மின் கம்பங்களை மின்வாரிய பணியாளர்கள் வந்து சரி செய்தனர்.

    லாரி டிரைவர் லாரியை பின்னால் இயக்கிய பொழுது கவனக்குறைவாக மின் கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பஞ்சு பேல்களை ஏற்றிய லாரி சென்னிமலை வழியாக கர்நாடக மாநி லத்திற்கு செல்வதற்காக வந்துள்ளது. போலீசார் பஞ்சு பேல்களுடன் நின்ற லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    ×