search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car driver attack"

    சென்னை அண்ணாநகரில் கார் டிரைவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    சென்னை அண்ணாநகர் நடுவங்கரையைச் சேர்ந்தவர் பிரபு. கால்டாக்சி டிரைவர். இவர் நேற்று இரவு காரை அண்ணாநகரில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி கும்பல் அவரை தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். பின்னர் அவரிடமிருந்த ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    அண்ணாநகர் நடுவங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் 2 வாலிபர்கள் நேற்று ஓட்டலில் வேலை பார்த்து விட்டு நடந்து சென்றனர். அப்போது முகமூடி கும்பல் அவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்து சென்றனர்.

    இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    தனது வாகனத்துக்கு வழிவிடாததால் கார் டிரைவரை ராஜஸ்தான் மந்திரி மகன் இழுத்து போட்டு அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. மந்திரியாக இருப்பவர் தன்சிங்ராவத். இவரது மகன் ராஜா.

    பன்ஸ்வாரா என்ற இடத்தில் ராஜா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக சுவிப்ட் கார் ஒன்று சென்றது. அந்த கார் ராஜாவுக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தது.

    இதனால் ராஜாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. திடீரென அந்த காரை முந்தி சென்று காரின் குறுக்காக ராஜா தனது காரை நிறுத்தினார்.

    பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து அந்த காரின் கதவை திறந்து டிரைவரை கீழே இழுத்து போட்டு அடித்து உதைத்தார். ராஜாவின் நண்பர் நீரவ்உபத்யாயியும் அவரை தாக்கினார்.

    அடி தாங்க முடியாமல் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விரட்டி விரட்டி தாக்கினார்கள்.

    இந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவ விடப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நடந்ததாகும். ஒரு மாதம் கழித்து இப்போது வீடியோவை யாரோ வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் ராஜா மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலுராம் ராவத்திடம் கேட்டபோது, சம்பவம் நடந்தது உண்மை தான். ஆனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆகி சென்று விட்டனர். யாரும் இதுசம்பந்தமாக போலீசில் புகார் கொடுக்கவில்லை. எனவே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

    இதுதொடர்பாக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த வி‌ஷயத்தில் புகார் கொடுக்காமலேயே போலீசார் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியும். சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசில் அங்கம் வகிக்கும் ஒருவர் மகன் தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது ஐ.பி.சி. சட்டம் 323 (ஒருவரை வேண்டும் என்றே காயப்படுத்துதல்), 447 (அத்துமீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்.

    ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டுள்ளனர் என்று கூறினார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின்பைலட் கூறும்போது, ராஜஸ்தானில் ஆளும் கட்சியினர் எவ்வளவு அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அவர்கள் சட்டம்-ஒழுங்கை தங்கள் கையில் எடுத்து அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    கடந்த மார்ச் மாதம் பன்ஸ்வாரா தொகுதி எம்.எல்.ஏ. ஜெயத்மல் சுங்கச் சாவடியில் தகராறு செய்து ஊழியரை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாயின.

    கடந்த டிசம்பர் மாதம் மாநில மந்திரி சுரேந்திர பதனாவின் 2 மகன்கள் ஒருவரை கடத்தி சென்று தாக்கியதாக புகார் கூறப்பட்டது. #Tamilnews
    ×