என் மலர்

  நீங்கள் தேடியது "Canon"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒப்போ/ஒன்பிளஸ்- ஹசெல்பிலாடு, விவோ-செய்ஸ் மற்றும் சியோமி-லெய்கா போன்ற கூட்டணிகள் இணைந்து செயல்படுகின்றன.
  • ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறைவு.

  ஸ்மார்ட்போன் மற்றும் கேமரா உற்பத்தியாளர்கள் இடையே கூட்டணி அமைப்பது மிகவும் சாதாரண விஷயம் தான். முன்னதாக இதுபோன்ற கூட்டணிகளை பல நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் வெய்போவில் ஓரளவுக்கு நம்பத்தகுந்த டிப்ஸ்டராக அறியப்படும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேனான் கேமரா பிராண்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது.

  ஏற்கனவே ஒப்போ/ஒன்பிளஸ்- ஹசெல்பிலாடு, விவோ-செய்ஸ் மற்றும் சியோமி-லெய்கா போன்ற கூட்டணிகள் சந்தையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், ஆப்பிள், சாம்சங், ஹூவாய், அசுஸ், கூகுள், ரியல்மி, ஹானர், சோனி மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் கேமரா உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைக்காமல் உள்ளன.

  இவற்றில் ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் குறைவுதான். சோனி நிறுவனம் தனக்கென சொந்த கேமரா பிரிவை கொண்டிருக்கிறது. சீனாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து, ரியல்மி, ஹானர் அல்லது ஹூவாய் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  ×