என் மலர்

  நீங்கள் தேடியது "business damage"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது.
  • இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

  ராமநாதபுரம்

  வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது.

  இதன் காரணமாக ராமநாதபுரம் பகுதியில் இன்று காலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் முழுமை யாக குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது.

  இன்று காலை பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின.

  போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்ற னர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலை யோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

  இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் பள்ளி விடுமுறை என தவறான தகவல் பரப்பப்பட்டதால் பெற்றோர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் நள்ளிரவு முதல் மழை பெய்ந்து கொண்டு உள்ளது. கடலில் பலத்த காற்று வீசியதாலும், புயல் சின்னம் உருவானதாலும் மீன் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் வழங்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

  இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக வழக்கமான தொழில் பாதிக்கப்பட்டது. தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரவிலிருந்து காலை வரை மழை அளவு 22 மில்லிமீட்டராக பதிவானது.

  ×