என் மலர்
நீங்கள் தேடியது "bus woman jewelry"
கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் சோனாச்சலம். இவரது மனைவி தங்க புஷ்பம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களுரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று சென்னை திரும்பினார்.
பின்னர் அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி செல்லும் மாநகர பஸ்சில் (எண்.77) அமர்ந்தார். பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் தங்கபுஷ்பம் தனது கைப்பையை பார்த்த போது, அது கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 13 பவுன் நகை இருந்தது.
மர்ம நபர்கள் பையை பிளேடால் கிழித்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






