என் மலர்
நீங்கள் தேடியது "bunyan worker killed"
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த வாலிபரின் உடலை மீட்டு சோதனை செய்ததில் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் சுகுமார் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக இருந்தார். கொலையான ரமேசுக்கு சரிதா என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
கொலை குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






