search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budhan dosham"

    மனநோய், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஆகிய நோய்களுக்கு புதனே காரணமாக இருப்பதால் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்டவர் அவசியம் திருவெண்காடு வந்து, புதன் பகவானுக்கு பரிகார பூஜை செய்து ஆக வேண்டும்.
    புத பகவானுக்கு புதன் கிழமையில் புதன் பகவானுக்கு அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம், மரகதமணி, வெண்தாமரை இவற்றால் அலங்காரம் செய்து, புதனைப் பற்றிய ஸ்தோத்திரங்களை ஓதி, நாயுருவி சமித்தால் யாகத் தீ எழுப்பவும். பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து, தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்யவும். தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.

    புத பகவானை வழிபடும்போது ராகம் தெரிந்தவர்கள் நாட்டக் குறச்சி ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுவது மிகுந்த சிறப்பாகும்.

    அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன்கிழமை தோறும் பூஜை அறையில் போடவும். விளக்கேற்றி வைத்து புதனுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.

    மனநோய், சோகை, புற்றுநோய், வாதநோய், நரம்புத் தளர்ச்சி, வெண்குட்டம், ஆண்மைக்குறைவு, சீதள நோய் ஆகிய நோய்களுக்கு புதனே காரணமாக இருப்பதால் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்டவர் அவசியம் திருவெண்காடு வந்து, புதன் பகவானுக்கு பரிகார பூஜை செய்து ஆக வேண்டும்.
    ×