என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget 2024-25"

    • மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 23-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    புதுடெல்லி:

    2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்தச் சந்திப்பின்போது பட்ஜெட் தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×