என் மலர்
நீங்கள் தேடியது "Brother brother killed"
கொல்லிமலை அருகே சுடுகாட்டில் பிணமாக கிடந்த அண்ணன், தம்பியை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள வலப்பூர்நாடு ஆலவாடி பட்டியை சேர்ந்தவர்கள் முத்துசாமி (வயது 55), சீரங்கன்(45). இருவரும் அண்ணன், தம்பி ஆவர்.
இருவரும் பகுடிபுதுவலவு சுடுகாட்டு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த கொலைகள் குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் சீரங்கன் வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி வந்தவர்கள், அண்ணன்-தம்பி இருவரையும் அழைத்துச் சென்று பகுடிபுதுவலவு சுடுகாட்டில் வைத்து தீர்த்துக்கட்டி உள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கொலையாளிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்? யார்? என்பதை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் (சேந்தமங்கலம் போலீஸ் நிலையம்), ராமகிருஷ்ணன் (பேளூக் குறிச்சி), கணேசன் (புதுச்சத்திரம்), மணிகண்டன் (நாமகிரிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த 4 தனிப்படைகளும் நேற்று முழுவதும் வலப்பூர் நாடு, ஆலவாடிப்பட்டி கிராமத்தில் முகாமிட்டு கொலையுண்ட முத்துசாமி, சீரங்கன் உறவினர்களை அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
இரட்டை கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன. நேற்று முன்தினம் இரவு சீரங்கன் வீட்டிற்கு வந்தவர்கள் கூலிப்படையினராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலைகள் செய்யப்பட்ட இடத்தில் வாழை இலையில் பொங்கல், முட்டை, மதுபானம் வைத்து, தேங்காய் உடைத்து ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் பூஜை பொருட்கள் கிடந்தன.
அவர்கள் புதையல் மற்றும் அபூர்வமான மூலிகையை எடுக்க நரபலி கொடுத்துள்ளனரா? அல்லது கொல்லிமலையில் இருப்பதாக நம்பப்படும் அமானுஷ்ய சக்தியை பெற நரபலி கொடுக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
மேலும் முத்துசாமி தோட்டத்தின் அருகில் வசிப்பவர் கிருஷ்ணன்(40). இவருக்கும் முத்துசாமி, சீரங்கன் ஆகியோருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இருவரது குடும்பத்தினரும் 35 ஆண்டுகளாக பேசிக்கொள்வதில்லை. கடந்த மே மாதம் கிருஷ்ணனை வேறொருவர் மிளகு காட்டிற்கு தீ வைத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கு முக்கிய சாட்சியாக இருந்தவர் சீரங்கன். அதே போல் கொலை சம்பவம் நடந்த பிறகு, நேற்று காலையிலே கிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஆட்களை வைத்து கிருஷ்ணனே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்றும், அதை மறைக்க நரபலி போன்று ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் கிருஷ்ணன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள். இவர்கள் பிடிப்பட்ட பிறகு தான் எதற்காக இந்த கொடூர கொலையை அரங்கேற்றினார்கள் என்பது குறித்த முழுவிபரங்களும் வெளியே தெரியவரும்.
இதனிடையே நேற்று இரவு சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத் திரியில் இருந்து முத்துசாமி, சீரங்கன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்து வருகிறார்கள். இன்று அல்லது நாளைக்குள் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது. #tamilnews