search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bodi mettu"

    போடி மெட்டு பகுதியில் கன மழை பெய்ததால் 1000 ஏக்கர் ஏலக்காய் கெடிகள் நாசமாகி உள்ளது.
    போடி:

    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஏலக்காய் விவசாய தோட்டங்கள் கேரள மாநிலத்தில் உள்ளது.

    கடந்த 4 நாட்களாக ஏலக்காய் விளையும் தோட்டங்கள் உள்ள கேரளா ஏலமுடி, பூப்பாறை, சாந்தாதாம்பாறை, கஜனாப்பாறை, சுண்டல், மூணாறு, வண்டன்மேடு உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையும், சூறாவளி காற்றுடன் பெரும் மழையும் பெய்து வருகிறது.

    இது சமயம் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய பெரும் மழையால் ஏலத்தோட்டங்களில் ஏலச்செடி நிழலுக்காக உள்ள பெரிய சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரங்கள் அருகில் உள்ள ஏலச்செடிகளில் விழுந்து நாசம் ஆகின.

    சூறாவளி காற்றால் ஏலச் செடிகள் ஒன்றுக்கொன்று முறுக்கி ஒடிந்து கீழே விழுந்துது உள்ளது. இதனால் தற்போது பறிக்கும் நிலையில் உள்ள ஏலக்காய், பழங்காய்கள், கருங்காய்கள், பிஞ்சுகள் பலத்த சேதம் அடைந்தன. இதை கண்ட ஏலக்காய் விவசாயிகள் மனமுடைந்து காணப்பட்டனர். கடன் வாங்கி ஏலக்காய் விவசாயம் செய்தவர்கள் குத்தகைக்கு எடுத்தவர்கள் பல லட்சகணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்கள் வழியாகவும், தெருச்சாலைகள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சூறாவளி காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஏல விவசாயிகள் குடியிருக்கும் வீடுகள், ஏலக்காயை பதப்படுத்தும் ஸ்டோர்கள், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் முற்றிலும் மின்சாரம் சப்ளை இல்லாமல் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

    ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கேரள மாநில அரசு செயல்பட்டு தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×