என் மலர்
நீங்கள் தேடியது "Boat Fire Accident"
- படகில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
- 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் போர்பந்தரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
போர்பந்தர்:
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே அரபிக்கடலில் மீன்பிடி படகு சென்று கொண்டு இருந்தது. திடீரென அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென படகு முழுவதும் பரவியது.
இது பற்றி அறிந்ததும் இந்திய கடற்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். படகில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்ததால் போர்பந்தரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அவர்களுடன் படகில் சென்ற 5 பேர் மாயமானார்கள். இதையடுத்து கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் இறங்கினார்கள். அப்போது கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 5 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பாபிகொண்டலு மலைப்பகுதியின் அழகை கண்டுகளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இன்று படகில் சென்றுகொண்டிருந்தனர். ராயல் கோதாவரி சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த படகில் 120 பேர் வரை சென்றதாக தெரிகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #BoatFire #PapiHills






