search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blackberry Key 2 Lite"

    பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் வெவ்வேறு மாடல்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BlackBerryKEY2


    பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் கீ2 விலை குறைந்த மாடலான கீ2 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநராக அறியப்படும் ஸ்லாஷ் லீக்ஸ் மூலம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் பார்க்க பிளாக்பெரி கீ2 போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய விலை குறைந்த மாடல் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் பிளாக்பெரி கீ2 எல்.இ. என்ற பெயரில் FCC தளத்தில்: BBE100-1 (சிங்கிள் சிம்) மற்றும் சர்வதேச சந்தைகளில் BBE100-4 (டூயல் சிம்), BBE100-2 (சிங்கிள் சிம்) மற்றும் அமெரிக்க சந்தைகளில் BBE100-5 (டூயல் சிம்) மற்றும் BBE100-3 பெயர்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.



    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் லூனா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, 4 அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் காப்பர் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போன் புளு அல்லது பிளாக் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு பக்கவாட்டுகளில் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. 

    பிளாக்பெரி கீ2 லைட் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு, செப்டம்பர் மாத துவக்கத்திலோ அல்லது IFA 2018 விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×