search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BIO GAS PLANT"

    • திருச்சி தனியார் பள்ளிக்கு பயோ கேஸ் பிளாண்ட் மற்றும் காலால் மிதித்து தண்ணீர் வரும் எந்திரம் வழங்கும் விழா நாளை மறுநாள் நடக்கிறது
    • பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் மேற்கண்டவற்றை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார்

    திருச்சி:

    திருச்சி புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் ஸ்கோப் தொண்டு நிறுவனம் சார்பில் உலகளாவிய கை கழுவும் தின விழா மற்றும் உணவு கழிவுகளை பயன்படுத்தி பயோ கியாஸ் தயாரிக்கும் பிளான்ட் தொடக்க விழா நாளை மறுநாள் (18-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர்கள் ஏ.ஜோசப் அந்தோணி, பி.அர்ஜூன் ஆகியோர் முன்னிலையில், பள்ளியின் முன்னாள் மாணவரும், ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்டம் 3000 பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மனுமான மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் பயோ கியாஸ் பிளாண்ட் மற்றும் காலால் மிதித்து தண்ணீர் வரும் நவீன எந்திரத்தை வழங்குகிறார்.

    இதில் திருச்சி ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் எம்.சுப்புராமன், ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர் ஏ.சமீர் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பயோ கியாஸ் பிளாண்ட்டை தொடங்கி வைக்கிறார்கள்.

    திருச்சிராப்பள்ளி மிட் டவுன் ரோட்டரி கிளப் திருநாவுக்கரசு, துளசி பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முன்னதாக பள்ளி தாளாளர் பி.கே.சீனிவாசன், தலைமை ஆசிரியர் டி.வேத நாராயணன் ஆகியோர் வரவேற்று பேசுகிறார்கள்.

    இந்த பள்ளிக்கு அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள காலால் மிதித்து தண்ணீர் திறக்கும் எந்திரம் வழங்குவதோடு, பயோ கியாஸ் பிளாண்ட் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளதையும் பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவதாக ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    ×