என் மலர்
நீங்கள் தேடியது "Bhairavam"
- பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மேலும் மஞ்சு மனோஜ் மற்றும் நர ரோகித் நடித்துள்ளனர்.
- பைரவம் திரைப்படம் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகிறது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த வருடம் முன் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது கருடன் திரைப்படம். இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். தெலுங்கில் பைரவம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தை விஜய் கனக்மேடலா இயக்கியுள்ளார்.
பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மேலும் மஞ்சு மனோஜ் மற்றும் நர ரோகித் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திரைப்படம் வரும் மே 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
அப்போது கதாநாயகன் மஞ்சு மனோஜ் நடிகர் சிம்புவுக்கு கால் செய்து தொலைப்பேசியில் பேசினார். சிம்பு பைரவம் திரைப்படத்திற்கும் படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் நகைச்சுவையாக பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் மஞ்சு " தக் லைஃப் படத்திற்கு வாழ்த்துக்கள். கமல்ஹாசன் சாரோட நீ இணைந்து நடித்தது எனக்கு பொறாமையாக இருக்கிறது. மேலும் சிம்புவிடம் அவர் மச்சான் எனக்கு 10 ஆயிரம் ஜிபே அனுப்புடா என கூறினார். சிம்பு மனோஜை பற்றி " மனோஜ் ஒரு குழந்தை போல் , அவனிடம் அன்பாக இருந்தால் 10 மடங்கு அன்பை திருப்பி கொடுப்பான் அதேப்போல் கோவத்தை காண்பித்தாம் அதுவும் 10 மடங்கு திரும்ப கிடைக்கும்" என கூறினார்.






