search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "basketball match"

    • ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது.

    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நேற்று தொடங்கியது. அமெட் பல்கலைக்கழக இணைவேந்தர் திருவாசகம், மீஞ்சூர் யூனியன் சேர்மன் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    போட்டி அமைப்பு குழுவை சேர்ந்த டாக்டர் ஏ.எம்.எம். செல்வராஜ், கே.எத்திராஜ், மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கே.கோபி, செயலாளர் எம்.கனகசுந்தரம், துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், பொருளாளர் கே.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. நேரு ஸ்டேடியத்திலும் போட்டி நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் கிளப் 62-31 என்ற புள்ளி கணக்கில் முகப்பேர் கிளப்பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எம்.ஆர்.எம். கூடைப்பந்து கிளப் 52-40 என்ற கணக்கில் ஒய் கூடைப்பந்து கிளப்பை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் சாம் கிளப், சென்னை கிளப், விக்னேஸ்வரா கிளப் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    சென்னையில் 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (31-ந்தேதி) முதல் வருகிற செப்டம்பர் 8-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது. #basketball

    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (31-ந்தேதி) முதல் வருகிற செப்டம்பர் 8-ந்தேதி வரை எழும்பூரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., ஸ்டேட் வங்கி, சுங்க இலாகா, எஸ்.டி.ஏ.டி., சத்யபாமா, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் உள்பட 34 அணிகளும், பெண்கள் பிரிவில் அரைஸ் ஸ்டீல், ரைசிங் ஸ்டார், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 7 அணிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன.

    ‘நாக்அவுட்’ மற்றும் ‘லீக்‘ முறையில் போட்டி நடக்கிறது. ஆண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரமும், பெண்கள் பிரிவுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர சிறந்த வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி பரிசு தொகையை வழங்குகிறது.

    இந்த போட்டியின் தொடக்க விழா 1-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

    போலீஸ் ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், எஸ்.கே.பி.சுந்தரம், பாஸ் போர்ட் மண்டல முன்னாள் அதிகாரி ருக்மாங்கதன், எத்திராஜுலு உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எல்.கிருஷ்ண மூர்த்தி, செயலாளர் எம். கனகசுந்தரம், பொருளாளர் எம்.எம்.டி.ஏ. கோபி ஆகியோர் தெரிவித்தனர்.

    ×