search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank employee house jewelry robbery"

    தேனி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது34). தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது குடும்பத்துடன் தேனியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் பாலகிருஷ்ணனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

    அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    வியாபாரிகள் போல் நோட்டமிட்டு பூட்டி கிடக்கும் வீடுகளில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×