என் மலர்
நீங்கள் தேடியது "bangladeshi arrested"
- செங்கோட்டை வளாகத்தில் 5 பேர் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர்.
- டெல்லியில் அவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
புதுடெல்லி:
சுதந்திரதினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி செங்கோட்டையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று செங்கோட்டை வளாகத்தில் 5 பேர் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றனர். அவர்களிடம் பாஸ் எதுவும் இல்லை.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் 5 பேரும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். டெல்லியில் அவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர். அவர்களிடம் இருந்து வங்கதேச நாட்டின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 பேரும் எதற்காக செங்கோட்டைக்குள் நுழைய முயன்றார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.






