search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANANA WASTE"

    • திருச்சி அருகே காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் வாழை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
    • அன்றாடம் சேகரமாகும் வாழை மரங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விரைவில் மக்க வைத்து அதனை உரமாக்கி விவசாயிகள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் இருந்து அன்றாடம் 3.5 டன் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பைகளை வகைப்படுத்தி அதை உரமாக்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கா குப்பைகளின் பயன்பாடுகளின்படி அதுவும் விற்பனை செய்யப்படுகிறது.

    காட்டுப் புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் அதிகப்படியான விவசாய நிலங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாழை கழிவுகளான வாழைத்தார் பகுதி, இலைகளின் அதிகமாக கழிவுகளாக காட்டுப்புத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அன்றாடம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    வாழை இலை கழிவுகள் மக்குவதற்கு சுமார் ஆறு மாத காலம் ஆகின்றது. இதனால் வளம்மீட்பு பூங்காவில் இட பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவைகளை இயற்கையில் உரத்துடன் தயாரிப்பு பணிக்கான தேவையான கிரஷர் மெஷின் ரோட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர்.கே.சீனிவாசன் நிதியின் மூலமாக காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கிரஷர் மெஷின் பயன்பாடுகள் குறித்து காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத்தலைவர் சுதாசிவ செல்வராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜீவஜோதி, பானுமதி, பழனிவேல், மாலதி, சந்திரகலா, அன்னபூரணி,

    காயத்ரி, கருணாகரன், மணிவேல், ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார் மற்றும் பேரூராட்சியின் இளநிலை உதவியாளர்கள் ராஜேந்திரன் பாரதியார் சித்ரா மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இக்கருவியின் செயல்பாடுகளை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி செயல் அலுவலர் விரிவாக எடுத்துரைத்தார்.

    இதனால் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் அன்றாடம் சேகரமாகும் வாழை மரங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விரைவில் மக்க வைத்து அதனை உரமாக்கி விவசாயிகளுக்கு பயன்பாட்டுக்கான விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ×