என் மலர்
நீங்கள் தேடியது "Bambaram symbol case"
- புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.
- தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.
அப்போது, மதிமுக கடந்த பிப்ரவரி 28ல் அளித்த புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






