search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avudaiyanur"

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் கூட்டுறவு ரேஷன் கடை இயங்கி வருகிறது.
    • கடையின் மேற்கூரை பகுதிகளில் சிமெண்ட் பூச்சு உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியில் தெரியும் வண்ணம் அபாய நிலையில் இடியும் தருவாயில் காணப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் கூட்டுறவு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையினை அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடையின் மேற்கூரை பகுதிகளில் சிமெண்ட் பூச்சு உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியில் தெரியும் வண்ணம் அபாய நிலையில் இடியும் தருவாயில் காணப்படுகிறது.

    ரேஷன் கடையில் பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் மாடியனூர் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார்கள் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் பருவமழை காலம் தொடங்கவுள்ளதால் ரேஷன் கடையின் மேற்கூரையானது மேலும் வலுவிழந்து உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எந்த ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்த தமிழன் மக்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் ஊரணி அருகே ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மஞ்சிஈஸ்வரன். இவர் தனது கோவிலின் நேர்த்திக் கடனுக்காக 2 ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
    • முதலில் ஆடுகளை நாய்கள் தான் கடித்ததாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் அதனை கண்டு நாய்கள் கடிக்கவில்லை. வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்து உள்ளது என கூறிவருகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் ஊரணி அருகே ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மஞ்சிஈஸ்வரன். இவர் தனது கோவிலின் நேர்த்திக் கடனுக்காக 2 ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவில் தனது வீட்டின் முகப்பு பகுதியில் வழக்கம் போல் 2 ஆடுகளையும் கட்டி போட்டுவிட்டு வீட்டின் உள்ளே தூங்கியுள்ளார். இன்று காலையில் எழுந்து ஆடுகளை பார்த்த பொழுது 2 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து குதறி போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    முதலில் ஆடுகளை நாய்கள் தான் கடித்ததாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் அதனை கண்டு நாய்கள் கடிக்கவில்லை. வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்து உள்ளது என கூறிவருகின்றனர்.

    இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்குகள் என்னவென்று வனத்துறை அதிகாரிகள் இன்று காலையில் வந்து ஆய்வு செய்து உள்ளனர்.

    ஏற்கனவே அப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு ஒன்று சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்களும் தற்பொழுது அந்த விலங்காக தான் இருக்குமோ என்று அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    ×