என் மலர்
நீங்கள் தேடியது "Avani"
- கோவிலில் தந்தைக்கு மகன் ‘ஓம்’ என்ற தாரகமந்திரம் உபதேசம் பெற்றதால் இங்கு உபநயனம் மிக விசேசமானது.
- ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் உமாதேவி, சிவாச்சாரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு பூணூல் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் பவித்ரோற்சவத்தை (ஆவணி அவிட்டம்) முன்னிட்டு அனைத்து சுவாமி சன்னதிகள், கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் பவித்தரம் (பூணூல்) சாத்தப்பட்டது.
கோவிலில் தந்தைக்கு மகன் 'ஓம்' என்ற தாரகமந்திரம் உபதேசம் பெற்றதால் இங்கு உபநயனம் மிக விசேசமானது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் உமாதேவி, சிவாச்சாரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.






