search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATMA Scheme"

    • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள உமரிக்காட்டில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.
    • உழவர் பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் மனோரஞ்சிதம் வேளாண்மை வணிகத்துறையில் உள்ள திட்டங்கள் பற்றி விவசாயிகளிடையே எடுத்து கூறினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனை மூலம், மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்ட அட்மா திட்டத்தின் கீழ் அறுவடை பின்சார் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள உமரிக்காட்டில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.

    பயிற்சிக்கு ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி கலந்து கொண்டு பல்வேறு பயிர்களுக்கு அறுவடை பின்சார் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். தொடர்ந்து வாழை, சிறுதானியங்கள், காய்கறிகளில் எவ்வாறு மதிப்பு கூட்டி சந்தைபடுத்துவது என விளக்க படங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

    மேலும் இப்பயிற்சியில் விவசாய குழுக்களுக்கு மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வழங்கும் இடங்கள் பற்றியும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை குழுவாக எவ்வாறு சந்தைபடுத்தலாம் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

    உழவர் பயிற்சி மையத்தின் துணை இயக்குநர் மனோரஞ்சிதம் வேளாண்மை வணிகத் துறையில் உள்ள திட்டங்கள் பற்றி விவசாயிகளிடையே எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர் பிரேம்குமார் வேளாண்மை துறையிலுள்ள திட்டங்கள் பற்றி கூறினார். வேளாண்மை வணிகத் துறையின் உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திலுள்ள வேளாண்மை வணிகத் துறையின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    இப்பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். பயிற்சியிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை வணிகத் துறையின் உதவி வேளாண்மை அலுவலர் அருணாச்சலம் மற்றும் அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர்.

    ×