search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asylum in the police"

    • பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்
    • வடவள்ளி போலீசில் தஞ்சம் அடைந்தனர்

    வடவள்ளி,

    கோவை உப்பிலி பாளையம் ஜி.வி. ரெசிடென்சி வீதியை சேர்ந்தவர் மணிராஜ் (22). பேரூர் பகுதியில் லோடு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த வர் சுபாஷினி (19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மணிராஜூக்கும், சுபாஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சுபாஷினி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் சுபாஷினியை மணிராஜ் கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்து இருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த மணிராஜூம், சுபாஷினியும் நேற்று மாலை வடவள்ளி போலீஸ்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் 2பேரும் வெள்ளலூரில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தை பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சுபாஷினியின் பெற்றோர் தங்களுடன் வரும்படி கூறி கண்ணீர் விட்டு அழுதனர். ஆனால் சுபாஷினி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். காதல் ஜோடியினர் 2 பேரும் மேஜர் என்பதால் சுபாஷினியை அவரது காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பாசமாக வளர்த்த மகள் தங்கள் வார்த்தையையும் மீறி காதலனுடன் செல்வதை பார்த்து பெற்றோர் கண்கலங்கிய படி போலீஸ்நிலைய வாசலில் நின்றனர். பெண்ணின் பெற்றோர் நடத்திய பாசப்போராட்டம் அங்கு ேதாற்றுப் போனது. 

    ×