என் மலர்
நீங்கள் தேடியது "as money donation"
- சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெ ற்றது.
- இதில் பக்தர்களின் காணிக்கையாக 25 லட்சத்து 64 ஆயிரத்து 795 ரூபாய் பணம் செலுத்தி இருந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெ ற்றது.
பவானி சங்கமே ஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் தலைமையில், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோவி ல் ஆய்வாளர் ரவிக்குமார், அயல்பணி ஆய்வாளர் செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கையாக 25 லட்சத்து 64 ஆயிரத்து 795 ரூபாய் பணமும், 72 கிராம் தங்கம் மற்றும் 2,810 கிராம் வெள்ளியும் செலுத்தி இருந்தனர்.
உண்டியல்கள் என்னும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், அறச்சலூர் நவரசம் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ லர்கள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.






