search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arugampul Thuvaiyal"

    வாயுத் தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. இன்று அருகம்புல் வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அறுகம்புல் - 1 கட்டு,
    கருப்பு உளுந்து - 20 கிராம்,
    வெங்காயம் - 1,
    பூண்டு - 7 பல்,
    இஞ்சி - சிறு துண்டு,
    புளி - பாக்கு அளவு,
    காய்ந்தமிளகாய் - தேவைக்கு,
    உப்பு - தேவைக்கு,
    கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன்.



    செய்முறை :

    அறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

    மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும்.

    அதே கடாயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும்.

    வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான அறுகம்புல் துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×