search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arokiya Annai Church"

    • விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வடக்கு வட்டாணம் பங்கு தந்தை செல்வ தயாளன் அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெபமாலை நடைபெறுகிறது.
    • 10-ம் நாள் அன்று மறைமாவட்ட பொறியாளர் ராபின், ஜெயபாலன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு புனித ஆரோக்கிய அன்னை ஆலய 123-வது தேரோட்ட திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கோவில்பட்டி பங்குத்தந்தை சார்லஸ், நெல்லை உடையார்பட்டி பங்குத்தந்தை மைக்கேல்ராஜ், கயத்தாறு பங்குதந்தை எரிக்ஜோ, உதவி பங்குத் தந்தை அன்புஜோசப் ஜெபக் குமார் மற்றும் உபதே சிகர், விழா கமிட்டி யினர் உள்பட ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) வடக்கு வட்டாணம் பங்கு தந்தை செல்வ தயாளன் அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெப மாலை, புனித மத்தேயு அன்பியம் நடைபெறுகிறது.

    3-ம் நாளான நாளை தூய சவேரியார் கல்லூரி நவீன், 4-ம் நாள் சாந்திநகர் ஜீப்லி நிலைய ஜெமல்ஸ் ஜேம்ஸ், 5-ம்நாள் மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் சேவியர் அருள்ராயன், 6-ம் நாள் சேந்தமரம் பங்குதந்தை இமானுவேல் ஜெகன்ராஜா, 7-ம்நாள் சிதம்பராபுரம் பங்கு தந்தை அந்தோணிராஜ், கழுகுமலை பங்கு தந்தை ஆட்டோ, 8-ம் நாள் கயத்தாறு பங்கு தந்தை எரிக்ஜோ, 9-ம்நாள் மறைமாவட்ட செயலர் மற்றும் பணிக்குழு அருட்தந்தை லூர்து மரஇயசஉதன், 10-ம் நாள் அன்று மறைமாவட்ட பொறியாளர் ராபின், ஜெய பாலன் ஆகியோர் தலை மையில் திருப்பலி நடை பெறுகிறது.

    இதனை தொடர்ந்து 10-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு நற்கருனை, ஆசீர், கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    ×