search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armed Forces Ground"

    • நெல்லை மாவட்டத்தில் இந்த உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளதை யொட்டி பாளை ஆயுதப் படை மைதானத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு உடல் தகுதி தேர்வு கலந்து கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டத்தில் 1,100 ஆண்களும், 450 பெண்களும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

    நெல்லை:

    தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை பிரிவில் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு உள்ள 3,552 காலிப் பணியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது.

    உடல் தகுதி தேர்வு

    அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணி களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது.

    அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு உடல் தகுதி தேர்வு வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    ஆயுதப் படை மைதானத்தில் பயிற்சி

    நெல்லை மாவட்டத்தில் இந்த உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளதை யொட்டி பாளை ஆயுதப் படை மைதானத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு உடல் தகுதி தேர்வு கலந்து கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பந்து எறிதல், ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனித்தனி இடங்கள்

    நெல்லை மாவட்டத்தில் 1,100 ஆண்களும், 450 பெண்களும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு காலை ஆயுதப்படை மைதானத்தில் வைத்தும், பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தனியார் கல்லூரி வளாகத்திலும் நடைபெற உள்ளது.

    ×