என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archaeological Department"

    • தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பராமரிப்பை ASI மட்டுமே கையாண்டு வருகிறது.
    • தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் ASI-ன் ஏகபோக உரிமை இந்தத் திட்டத்தின் மூலம் மாறும்.

    இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், கோட்டைகள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பராமரிக்கும் பணிகளில் தனியார், கார்ப்பரேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அனுமதிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பராமரிப்பை ASI மட்டுமே கையாண்டு வருகிறது. இதனால் பல திட்டங்கள் தாமதமாவதால் பொது-தனியார் பங்கேற்பு மூலம் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.

    எனவே இந்த திட்டத்தின்படி பதிவு செய்த தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் இனி நேரடியாகப் பபாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.

    தனியார் பங்களிப்பு இருந்தாலும், அனைத்துப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளும் ASI-ன் முழுமையான மேற்பார்வையின்கீழ் மட்டுமே நடக்கும்.

    இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தொல்லியல் துறையில் அனுபவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி, தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம்.

    தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் ASI-ன் ஏகபோக உரிமை இந்தத் திட்டத்தின் மூலம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
    • தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னக் குழுவும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    மத்திய அரசின் தொல்லியல்துறை (ASI) கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி டிக்கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் எட்டியுள்ளது.

    2019-20 நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன.

    2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னங்களும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    2023-24 நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. 

    ×