முதலிடத்தில் தாஜ்மகால்.. டிக்கெட் விற்பனையில் ரூ. 297 கோடி வருவாய் - மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்

மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னக் குழுவும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
முதலிடத்தில் தாஜ்மகால்.. டிக்கெட் விற்பனையில் ரூ. 297 கோடி வருவாய் - மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்
Published on

மத்திய அரசின் தொல்லியல்துறை (ASI) கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

அதன்படி டிக்கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் எட்டியுள்ளது.

2019-20 நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன.

2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னங்களும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

2023-24 நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com