search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appointment by consultation"

    • தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
    • தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்த லைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    வேண்டுகோள்

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.

    மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பணியிடங்களை உடன டியாக நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்ச ருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தர வரிசை அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கலந்தாய்வு

    அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 182 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 637 மூத்த முதுகலை ஆசிரியர்கள் என 819 பேர் கொண்ட முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.

    697 பேர்

    இதில் 697 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தங்களுக்கு விருப்பமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்தனர். 122 பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.

    இன்னும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13, திருவண்ணா மலை மாவட்டத்தில் 12, விழுப்புரம் மாவட்டத்தில் 6, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5, நீலகிரி மாவட்டத்தில் 5, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3, வேலூர் மாவட்டத்தில் 1 என 45 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றையும் விரைந்து நிரப்ப பள்ளிக்கல்வித் துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ளதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு துணை பொதுமாறுதல் கலந்தாய்வையும் ஆன்லைன் வழியாக நடத்த பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நன்றி

    மேலும் 3 நாட்களாக நடைபெற்ற மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மிகவும் வெளிப்படை தன்மையுடனும் எந்த ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணி யிடமும் மறைக்கப்படாமலும் நேர்மையாகவும் நடந்தது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், பள்ளி கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    ×