search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Marumalarchi Project"

    • பொதுமக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம்-2 என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • திசையன்விளை வட்டத்திற்கான முகாம், குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுனாமி பல்நோக்கு கட்டிடத்தில் நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி–த்திட்டம்-2 என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் -2 முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.

    அதன்படி பாளையங்கோட்டை வட்டத்திற்கான முகாம் முன்னீர்பள்ளம் வாரச்சந்தை நடைபெறும் இடத்திலும், இட்டேரி நூலக கட்டிடத்திலும், மானூர் வட்டத்திகுட்பட்ட முகாம் குறிச்சிகுளம் சமுதாய நலக்கூடத்திலும், தாழையூத்து பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    சேரன்மகாதேவி வட்டத்திற்கான முகாம் பாப்பாக்குடி பஞ்சாயத்து அலுவலகத்திலும், வெங்கடரெங்கபுரம் சமுதாய நலக்கூடத்திலும், அம்பை வட்டத்திற்கான முகாம் சிவந்திபுரம் இந்துநாடார் வர்த்தக சங்கத்திலும், சாட்டுபத்து கிராம சேவை மைய கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    நாங்குநேரி வட்டத்திற்கான முகாம் செங்களாகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்திலும், இடையன்குளம் சமுதாய நலக்கூடத்திலும், ராதாபுரம் வட்டத்திற்கான முகாம் பரமேஸ்வரபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடக்கிறது.

    திசையன்விளை வட்டத்திற்கான முகாம், குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுனாமி பல்நோக்கு கட்டிடத்தில் நடக்கிறது.

    8-ந் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சாதிச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையான அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை சேவைகள் உள்ளிட்ட தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம். எனவே மேற்கண்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய்துறை மற்றும் பிறதுறைகளின் சேவைகளை பெற்று பயனடைய கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    ×