என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andrew Strauss"

    • புகை பிடித்தல் பழக்கம் இல்லாத போதிலும் நுரையீரல் புற்றுநோயால் காலமானார்.
    • அவர் நினைவாக அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இவர் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவரது மனைவி ரூத். இவர் நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு 46 வயது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் மனைவி இறந்து 7 ஆண்டுகள் கழித்த நிலையில், தற்போது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அண்டோனியா லின்னேயஸ்-பீட் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதனை ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    மனைவி மறைந்த பின்னர் அவர் நினைவாக புகைப் பிடிக்காமல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ரூத் ஸ்ட்ராஸ் பவுன்டேசன் என்ற அறக்கட்டளையை தொடங்கினார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்த முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டாரங் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். #England #AndrewStrauss
    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்த முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டாரங் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். ஸ்டாரசின் மனைவி ரூத் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது சிகிச்சைக்காக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் இயக்குனர் பதவிக்கு திரும்ப வரமாட்டேன். வேறு பொறுப்பில் எதிர் காலத்தில் பதவி ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார். #England #AndrewStrauss
    ×