என் மலர்
நீங்கள் தேடியது "andipatti union office"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கே.காமாட்சிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குன்னூர் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழ்குழாய் கிணறு அமைத்து குடி நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 1 ஆண்டாக குடிநீர் முறையாக சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆண்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசபேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாளை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றால் பாராளுமன்ற தேர்லை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.






