search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati Cooperative Sugar Mill"

    • மடத்துக்குளம் வட்டம், சங்கராமநல்லூரில் தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலைப் பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • நடப்பாண்டில் சுமார் 400 எக்டர் பரப்பளவுக்கு தேவையான காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணை, உடுமலைப்பேட்டைபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    உடுமலைப்பேட்டை அமராவதி சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்தும், ஆலையின் பராமரிப்பு, அரவைத்திறன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, விவசாய பரப்பளவு உள்ளிட்டவைகள் குறித்தும் மற்றும் அமராவதி சர்க்கரை ஆலை வடிப்பகத்தில் உற்பத்தி திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, ஆலையை நன்கு பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த ஆய்வின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் மடத்துக்குளம் வட்டம், சங்கராமநல்லூரில் தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலைப் பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இப்பண்ணையில் நமது மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்க வேண்டிய காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தாய் செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் இடங்களையும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும் நிழல்வலை கூடாரங்களையும் குழுத்தட்டு நாற்றுகளையும் ஆய்வு மேற்கொண்டும், பண்ணையில் மூன்று ஏக்கர் பரப்பளவில் மா கொய்யா மாதுளை மற்றும் எலுமிச்சை போன்ற பல செடிகளின் தாய் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓர் இரண்டு ஆண்டுகளில் இந்த தாய் செடிகளை ஆதாரமாகக் கொண்டு பல செடி நாற்றுகள் ஒட்டு கட்டுதல் முறையில் பதியன் போடுதல் முறையிலும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், தற்பொழுது உள்ள நிழல்வளை கூடார அமைப்பினை பயன்படுத்தி தோட்டக்கலை துறையின் மானிய த்திட்டங்களுக்கு தேவையான காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சுமார் 400 எக்டர் பரப்பளவுக்கு தேவையான காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே உள்ள நீர் ஆதாரங்களுடன் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கியும் பண்ணை பணியில் ஆர்வம் உள்ள பணியாளர்களை சேர்த்தும் பண்ணையின் உற்பத்தியினையும், நாற்றுகளின் தரத்தையும் அதிகரிக்கு மாறு தோட்டக்கலைதுறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளைவிரைந்து முடித்து பொதுமக்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் நளினா, துணை ஆட்சியர் (வடிப்பாலைப்பிரிவு) துரை,உடுமலைப்பேட்டை நகர்மன்றத்தலைவர் மத்தின், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) (பொறுப்பு) சந்திர கவிதா, குடிமங்கலம் வட்டார மருத்துவஅலுவலர் பிரபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    ×