search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allowed to bath"

    • கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
    • மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

    மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது.

    இதனால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் டிசம்பர் 26-ந் தேதி முதல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    தொடர்ந்து 6-வது நாளாக இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து நிலையில் அருவியில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப் பதற்க்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப் பக இனை இயக்குநர் செண்பக ப்ரியா அனுமதி அளித்துள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வந்தது.
    • மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 5-ந்தேதி முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வந்தது.

    மேலும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 5-ந்தேதி முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அருவியில் நீர்வரத்து குறைந்து அருவியில் சீராக தண்ணீர் விழுவதால் 18 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி அளித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா தெரிவித்துள்ளார். 

    ×