search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All departmental officers"

    • தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார்

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

    அமைச்சர் உதயநிதி நெல்லை வருகை

    இதையொட்டி மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.

    மேலும் அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    அதன்படி வருகிற 27-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    உற்சாக வரவேற்பு

    இதற்காக நாளை (வியாழக்கிழமை) மாலையில் விருதுநகரில் இருந்து காரில் நெல்லைக்கு அவர் வருகிறார். அப்போது அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தாழையூத்து பண்டாரகுளம் அருகே கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்குள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விடுதியில் அவர் இரவில் தங்குகிறார்.

    27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார். பின்னர் மாதா மாளிகையில் நடைபெறும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

    நூலகம் திறப்பு

    தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.டி.சி.நகர் பகுதியில் இளைஞரணி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து, தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வழியாக நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்திற்கு அமைச்சர் உதயநிதி வருகிறார். அங்கு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    ஆய்வு கூட்டம்

    தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் மாலையில் பாளை திருமால் நகரில் நூலகத்தை திறந்து வைத்துவிட்டு குமரி மாவட்டத்திற்கு காரில் புறப்படுகிறார்

    ×