search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airhorns will be removed"

    • தமிழக-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தி நெடுஞ்சாலை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் சந்திப்பாக அமைய பெற்றுள்ளது.
    • அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    அன்னூர் பஸ் நிலையம் ஆனது மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் மற்றும் தமிழக-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தி நெடுஞ்சாலை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் சந்திப்பாக அமைய பெற்றுள்ளது.

    அன்னூர் பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அன்னூர் பஸ் நிலையத்தின் அருகாமையில் அன்னூர் அரசு பொது மருத்துவமனை, அரசு பள்ளிகள், கோவில்கள் என அமைய பெற்றுள்ளது.

    இந்த சாலையின் வழியாக வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், அதிக வேகத்துடனும் மற்றும் அதிக ஒளி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தியும் பொதுமக்களுக்கு இடையூறு தருமாறு அமைவதால், போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது .

    அதன் அடிப்ப டையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் தலைமையில் அன்னூர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது தடையை மீறி 15 அரசு மற்றும் தனியார் பஸ்களில் தடை செய்ய ப்ப ட்ட ஏர் ஹாரன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை உடனடியாக பஸ்சில் இருந்து அகற்றப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தடையை மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயன்படுத்திய 15 ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்துள்ளோம். மீண்டும் இதனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×