என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Technology"

    • இணை பேராசிரியர் ரஜினிமாலா வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
    • வேளாண்மை அலுவலர் மணி சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்ட வழிகாட்டுதலின் படி உலகன்குளம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கான பயிற்சி சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் பூங்கோதைகுமார் தலைமையில் நடத்தப்பட்டது.

    சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி, விவசாயிகள் மற்றும் சகோதர துறை சார்ந்த அலுவலர்களை வரவேற்று பேசினார்.அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் இணை பேராசிரியர் ரஜினிமாலா மண் பரிசோதனை, விதைநேர்த்தி, விதை கடினபடுத்துதல், வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலன், வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

    வேளாண்மை அலுவலர் மணி சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் கிசான் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதிஷ்குமார் நன்றி கூறினார்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சேக் முகமது அலி, சக்தி, கணேசன், தமிழரசன், கலா, கார்த்திகா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×